Home /News /tamil-nadu /

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஓர் அலசல்!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஓர் அலசல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நடப்பு ஆண்டான 2022 ல் வெறும் இரண்டு மாதங்களில் மட்டும் அதாவது ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 114 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
2020, 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காலங்களை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டான 2022ன் தொடக்கத்திலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சென்னையில் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கடந்து 2019 மார்ச் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை போன்றவற்றை தடுப்பதற்கும், உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் தீவிரமாக  செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காலங்களை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டான 2022 ல் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சென்னையில் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை தடுக்க சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் சியமளா தேவி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

நடப்பு ஆண்டான 2022 ல் வெறும் இரண்டு மாதங்களில் மட்டும் அதாவது ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 114 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்துள்ளனர்.

2022 ம் ஆண்டு ( ஜனவரி மற்றும் பிப்ரவரி இரண்டு மாதங்கள் மட்டும்)

போக்சோ : 49

பாலியல் வன்கொடுமை. : 2

பாலியல் சீண்டல்கள்  : 16

வரதட்சணை இறப்புகள் : 0

வரதட்சணை கொடுமை வழக்குகள் : 5

கடத்தி துன்புறுத்துதல் : 0

கணவர் மற்றும் கணவர் குடும்பத்தால் தாக்கப்படுவது : 9

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் : 33

இது கடந்த 2020, 2021 ம் ஆண்டுகளின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதியப்பட்ட மொத்த வழக்கு பதிவுகளின் சதவிகித்தை விட அதிகம்.

2021ம் ஆண்டு பதிவான குற்றச் சம்பவங்கள்:

போக்சோ : 435

பாலியல் வன்கொடுமை. : 46

பாலியல் சீண்டல்கள்  : 146

வரதட்சணை இறப்புகள் : 1

வரதட்சணை கொடுமை வழக்குகள் : 16

கடத்தி துன்புறுத்துதல் : 26

கணவர் மற்றும் கணவர் குடும்பத்தால் தாக்கப்படுவது : 95

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் : 214

என கடந்த 2021 ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சென்னையில் மொத்தம் 989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு பதிவான குற்றச் சம்பவங்கள்:

போக்சோ : 239

பாலியல் வன்கொடுமை. : 31

பாலியல் சீண்டல்கள்  : 61

வரதட்சணை இறப்புகள் : 3

வரதட்சணை கொடுமை வழக்குகள் : 9

கடத்தி துன்புறுத்துதல் : 14

கணவர் மற்றும் கணவர் குடும்பத்தால் தாக்கப்படுவது : 55

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் : 199

என கடந்த 2020  ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சென்னையில் மொத்தம் 618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 2019 ஆம் ஆண்டில் 111 போக்சோ வழக்குகள், 126 பாலியல் சீண்டல்கள், 37 வரதட்சனை கொடுமை வழக்குகள், பாலியல் வன்கொடுமை 17 என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 97, பாலியல் சீண்டல்கள் 159, வரதட்சணை கொடுமை 39, பாலியல் வன்கொடுமை 15 என 310 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 69, பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் 151, வரதட்சணை கொடுமை 71, பாலியல் வன்கொடுமை 13 வழக்குகள் என 304 வழக்குகள் பதிவாகியிருந்தன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்புப் பிரிவு துணை ஆணையர் சியாமளாதேவி நமக்கு அளித்த பேட்டியில், " பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று சொல்வது சரியல்ல; பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அதன்பேரில் புகாரளிக்க முன்வருகிறார்கள் என்பதே சரியானதாகும்" என்றார்.

சியமளா தேவி - துணை ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு


"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டால் குடும்ப மானம் போய்விடும் என கருதி புகார் அளிக்க முன்வராத சூழல் இருந்தது.
மேலும், தனக்கு நடக்கும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெண்கள் வீட்டில் சொல்லமுடியாத நிலை இருந்து வந்தது. சொன்னால், அப்பெண்ணின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவார்கள்.

தற்போது குடும்ப வன்முறைகள் குறித்தும் பாலியல் தொல்லை குறித்தும் காவல்துறையால் தொடர்ச்சியாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் பெண்களுக்கு புகார் அளிக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

Also read... தொப்புள் கொடியுடன் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தை.. உரிமை கோரி வந்த தம்பதி

மேலும் "இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவரிடமும் செல்லும்பட்சத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுவதுமாக குறைந்து விடும்" எனவும்  மேலும், புகார் அளிக்கும் நபர்களின் ரகசியங்கள் காவல்துறையினரால் 100% பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1091, 1098, 181 ஆகிய எண்களில் அழைத்தும் 9500099100 என்ற மொபைல் எண்ணில் மெசேஜ் செய்தும் புகாரளிக்களாம்" எனவும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி