மே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தகுதியான நிறுவனங்களை ஊக்குவித்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

 • Share this:
  தமிழகத்தில் வரும் 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் இரு வாரங்களுக்கு அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்துவது தொடர்பாக தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

  தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். ஊரடங்கை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தகுதியான நிறுவனங்களை ஊக்குவித்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

  ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 24-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் நிலை வராது என்றும், அவ்வாறு ஏற்பட்டால் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: