பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் தொடர்பான வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..

அயனாவரம் ரவுடி சங்கர்

போலீசார் திட்டமிட்டு சங்கரை கொன்றதாக கூறிய உறவினர்கள், சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீசார் திட்டமிட்டு சங்கரை கொன்றதாக கூறிய உறவினர்கள், சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  Also read... மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பற்றாக்குறையா? அரசு மருத்துவமனை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு..

  இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, சங்கர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தது. இந்நிலையில், என்கவுண்டர் நடந்த நியூ ஆவடி சாலை பகுதியில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  மேலும், என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் சங்கரின் உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: