ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல்தொல்லை! 60 வயது முதியவருக்கு 10 வருட சிறை

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல்தொல்லை! 60 வயது முதியவருக்கு 10 வருட சிறை

கோப்புப் படம்

கோப்புப் படம்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குளித்தலை காவல்நிலையத்தில் கடந்த 2018 ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை தண்ணீர்ப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(60). அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குளித்தலை காவல்நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்பமையில் சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை  விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சசிகலா இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் அபராதம் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Child Abuse