சென்னையில் அதிகரிக்கும் கொரோனா... 40,000 பேரிடம் மாதிரிகள் எடுக்க மாநகராட்சி முடிவு...!

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஆய்வு செய்த போது
- News18 Tamil
- Last Updated: April 14, 2020, 2:09 PM IST
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 40,000 பேரிடம் மாதிரிகள் எடுக்கவும், 10,000 தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்காக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் 80 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றும், சென்னையில் அமைக்கப்பட உள்ள 35 மாதிரி சேகரிப்பு மையங்கள் மூலம் 40,000 பேரிடம் மாதிரிகள் சேகரிக்க திட்டம். இதுவரை செயல்பட்டு வரும் 16 மையங்களில் 600 மாதிரிகள் சேகரிப்பு. தினமும் 2000 பேருக்கு மாதிரி எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், தங்களுடைய மாதிரிகளை அளிக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் அதிகமான நபர்களை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.

மேலும்,சென்னையில் மாநகராட்சி கட்டிடங்கள், கல்லூரிகள், அண்ணா பல்கலை, ஐ ஐ டி, மத்திய அரசு பயிற்சி மையங்கள் மற்றும் பல தனியார் இடங்கள் மூலம் 10,000 தனிமைப்படுத்தும் படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்து பேசிய அவர்,இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளன. மக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்,வீடுகளில் மக்களே மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.
கைக்குட்டையை கூட முக கவசமாக பயன்படுத்தலாம் என்றார்.மேலும்,நிறைய மாஸ்க் உற்பத்தி செய்து நிவாரணமாக தன்னார்வலர்கள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தவிர, திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
20,000 தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பணியாளர்கள் சிலர் பயன்படுத்தாமல் உள்ளனர். அவர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படும் என்றார்.
Also see...
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்காக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் 80 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றும், சென்னையில் அமைக்கப்பட உள்ள 35 மாதிரி சேகரிப்பு மையங்கள் மூலம் 40,000 பேரிடம் மாதிரிகள் சேகரிக்க திட்டம்.