Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி

தடுப்பூசி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், போலியோ தடுப்பூசி முகாம் போன்ற காரணங்களால், கடந்த 2 வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாமல் இருந்தது.

  • News18
  • Last Updated :
    தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், போலியோ தடுப்பூசி முகாம் போன்ற காரணங்களால், கடந்த 2 வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. சென்னை கே.கே.நகரில் 23வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

    சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்ற பின் முதல் நிகழ்ச்சியாக, இந்த முகாமில் மேயர் பிரியா கலந்து கொண்டார். முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை 91.54 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியும், 72.62 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாக கூறினார். சென்னையில் 98% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    Also read... பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

    உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களின் மருத்துவக்கல்விக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேசிய மருத்துவ கவுன்சில் ஆலோசனையுடன் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

    மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona Vaccine, Ma subramanian

    அடுத்த செய்தி