சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரு வாரத்தில் 30% வரை உயர்ந்த பாதிப்பு: கொரோனா அப்டேட்..

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஒரே நாளில் 2174 பேர் பாதிக்கப்பட்டிருப்பது இது வரை காணாத உச்சம்.

சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரு வாரத்தில் 30% வரை உயர்ந்த பாதிப்பு: கொரோனா அப்டேட்..
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஒரே நாளில் 2174 பேர் பாதிக்கப்பட்டிருப்பது இது வரை காணாத உச்சம்.

ஆனால் சென்னையில் அதே நாளில் மற்ற நாட்களை விட பாதிப்பு குறைவாக தான் பதிவாகியுள்ளது. சென்னையில் புதன்கிழமை தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1276. மற்ற மாவட்டங்களிலிருந்து 898 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டது.சென்னையின் உச்சம் கடந்த 13ம் தேதி ஒரே நாளில் 1484 பாதிக்க்ப்பட்ட போது பதிவாகியது. அன்று சென்னை தவிர பிற மாவட்டங்களில் 505 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த மூன்று நாட்களுக்கு 600க்கு உள்ளாக இருந்தது.

மே 1ம் தேதி தமிழகத்தில் 203 பேர் தொற்று கண்டறியப்பட்டதும் அப்போது சென்னையில் 176 பேரும் பிற எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த்து 27 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். வெளி மாநில, உள் மாநில போக்குவரத்து ஆரம்பித்த பிறகு இந்த எண்ணிக்கை மெல்ல உயர்ந்திருக்கிறது என்பதை காண முடிகிறது.

ஜூன் 1-ஆம் தேதி சென்னை தவிர பிற மாவட்டங்களில் 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த பாதிப்பு வேகமாக அதிகரித்து 898 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.Also read... சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிவோரை பிடித்து வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் கடும் கெடுபிடி..

சென்னையில் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் தான் இந்த எண்ணிக்கை உயர்கின்றன.

புதன்கிழமை ஒரே நாளில் கடலூரில் 63 பேர், ராணிப்பேட்டையில் 68 பேர், ராமநாதபுரத்தில் 50 பேர், திருவண்ணாமலையில் 47 பேர், தூத்துக்குடியில் 43 பேர் உள்ளூரில் இருந்தவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் புதிதாக  13,362 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 9237 (69.1%) பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

3954 (29.5%) பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பாதிப்பாகும். எந்த மாவட்டக் கணக்கிலும் சேர்க்கப்படாத 171 பேர் ரயில்வே மற்றும் விமான நிலைய தனிமைப்படுத்தும் மையங்களில் உள்ளனர்.

Total.   CHN.   OTH

2174.  1276.   898

1515.   919.    596

1853.  1257.   596

1974.   1415.  559
1989.   1484.   505


1982.  1479.   503


1875.   1407.   468 


1927.   1392.  535


1162.    967.    195


805.      549.   256


743.      557.   186


434.      310.   124


 203.        176.  27
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading