Home /News /tamil-nadu /

பள்ளிகளில் மதமாற்றம் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 70 சதவிகிதம் கிறிஸ்துவர்களாக இருந்திருப்பார்கள் - பீட்டர் அல்போன்ஸ்

பள்ளிகளில் மதமாற்றம் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 70 சதவிகிதம் கிறிஸ்துவர்களாக இருந்திருப்பார்கள் - பீட்டர் அல்போன்ஸ்

மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

தமிழகத்தை பிளவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளி மீது மதமாற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ மோனகன் மேல்நிலைப் பள்ளியில் மதமாற்ற நடைபெறுவதாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக ஆளுநரிடமும் குழந்தைகள் ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

    இந்நிலையில், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சம்மந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகள், பெற்றோர்களிடம் மதமாற்ற புகார் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் அரசு சார்பில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்திகா மதமாற்றம் நடைபெறவில்லை என கூறியிருப்பதாக தெரிவித்தார்.

    அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும், மாநில குழந்தைகள் ஆணைய தலைவர், உறுப்பினர் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பள்ளிகளில் மதமாற்றம் நடைபெற்றிருந்தால் தமிழகத்தில் 70 சதவிகிதம் கிறிஸ்துவர்களாக இருந்திருப்பார்கள் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

    Also Read : சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி அத்துமீறலா? வைரல் வீடியோ குறித்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    இதைபற்றி தொடர்ந்து பேசிய அவர், அந்த பள்ளியில் 40 விழுக்காடு இந்து, 40 விழுக்காடு முஸ்லீம் , மற்றும் 20சதவிகித குழந்தைகள் கிறுத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் எனவும், விடுதியில் தங்கியுள்ள 100 விழுக்காடு குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். மேலும், அரசு சார்பில் ஆய்வு மேற்கொண்ட கார்திகா ஐ.ஏ.எஸ் மதமாற்றம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார் எனவும், தமிழகத்தை சவக்காடாக மாற்றும் முயற்சியாகதான் இது போன்ற மதமாற்ற புகாரினை கிளப்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

    தொடர்ந்து தமிழக அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய தலைவர் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் மதமாற்றம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை..வராதபோது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என கூறினார்.convers
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Christian conversion, Religious conversion

    அடுத்த செய்தி