ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக கோரிக்கை!

அரசு அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக கோரிக்கை!

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த அரசு அலுவலர்களையும், காவல்துறை அலுவலர்களையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என அதிமுக மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.  அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்களும், சுமார் 80,000 காவல் பணியாளர்களும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

நடைபெற இருக்கின்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இந்த தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்களாக பயன்படுத்தக் கூடாது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையும், காவல்துறை பணியாளர்களையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திமுக ஆட்சியின் மீது எதிர்ப்பையும், வெறுப்பையும் கொண்டிருக்கக்கூடிய அரசு ஊழியர்களும், காவல்துறை அலுவலர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற போது தபால் வாக்குகளை செலுத்தக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதை சாதகமாக்கிக் கொண்டு திமுகவினர் அதிகார பலத்தை பயன்படுத்தி வாக்கு எண்ணும் நாளில் மிகப்பெரிய சட்ட விதி மீறலை செய்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமான வாக்குகளை செல்லாது என அறிவித்தும் வெற்றி எண்ணிக்கை மிக கணிசமான அளவில் இருக்கின்ற போது தபால் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் அவர்கள் முயல்வார்கள்.

Also read... நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி, எஸ்.டிக்கு இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த அரசு அலுவலர்களையும், காவல்துறை அலுவலர்களையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் அரசு அலுவலர்களும், காவல்துறை பணியாளர்களும் இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை நேரடியாக செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: ADMK, Election Commission, Local Body Election 2022