Home /News /tamil-nadu /

17 பேரின் உயிரை பறித்த சுவர்... வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்

17 பேரின் உயிரை பறித்த சுவர்... வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்

சுவர் இடிந்த விழுந்த வீடுகளின் நிலை

சுவர் இடிந்த விழுந்த வீடுகளின் நிலை

  • News18
  • Last Updated :
    மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 2-ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுவர் அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது இடிந்து விழுந்தது.

    இதில் வீடுகளுக்குள் உறங்கி கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். நாடு முழுவதும் சோகத்தை ஏற்டுத்திய இந்நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தப்பட்டது.

    உயிரிழப்பிற்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி அவருக்கு  நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காததால் சுயமரியாதை வேண்டி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி