டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி

தேர்வர்கள் தங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தைwww.tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அடுத்தாண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலமாக நிரப்புகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை.

  இந்த நிலையில் அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடைபெற உள்ளது என்பதற்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பும் எந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது.

  அதன்படி குரூப் 4 விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற மே மாதமும், குரூப் 3 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also read... வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடு: செந்தில் பாலாஜி மனுவுக்கு பதில் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  இதனடிப்படையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வர்கள் தங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தைwww.tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் அடுத்த ஆண்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு காலி பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: