தலைவாசலில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 • Share this:
  சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் லத்துவாடி ஊராட்சியில், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால், இலத்துவாடி கவர்ப்பனை கிழக்குராஜாபாளையம் திட்டச்சேரி ஆகிய நான்கு கிராம மக்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விழாவில் பேசிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 100 அம்மா மினி கிளீனிக் தொடங்கப்பட உள்ளது என்றும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  ‘நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், இன்றைக்கும் விவசாயம் செய்து வருகிறேன்’ என்று குறிப்பட்ட முதலமைச்சர், விவசாய மக்களுக்கு மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டுள்ளது .நோய் அதிகம் உள்ள கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழு சென்று சிகிச்சை அளிக்கும் என்றும் கூறினார்.

  தமிழகத்தில், புதியதாக ஐநூறு, ‘108 ஆம்புலன்ஸ்’ வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர், கொரோனவால் இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைத்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், கிராமங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருப்பதாகவும் கூறினார்.

  தலைவாசலில் கால்நடைப் பூங்கா கட்டிமுடிக்கப்பட்ட பிறகு கெங்கவல்லி சட்டமன்றதொகுதி உலகளவில் புகழ் பெறும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: