கல்லூர் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
கொரோனா பலவலை தடுக்கும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ அரசு நாள்தோறும் 2 ஜிபி கட்டணமில்லா டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக தலைமை பரிசீலிக்கும் - கே.பி. முனுசாமி
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.