தமிழகத்தில் இன்று முதல் '1100' உதவி எண் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது 1100 சேவை எண் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 என்ற சேவை மையம் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

  இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதலமைச்சரின் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளதாகதாக தெரிவிக்கப்பட்து. பின்னர், எந்த ஒரு உதவி குறித்து தகவல் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், முதலமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியரை இனி நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், 1100 எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கேட்டால் உடனடியாக அதற்கு பலன் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: