ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்

மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்

விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 • 2 minute read
 • Last Updated :

  மதுரை அருகே கட்டடத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், தலைமை காவலர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

  மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தின் தலைமை காவலர்களான  சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மதுரை வெங்காய மண்டி, தயிர் மார்க்கெட் மற்றும்  அதிகமான லாரி பார்சல் சர்வீஸ் இருப்பதால்  லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவதுமாகவும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருக்கும் இங்கு காவலர்கள் இருவரும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில்  கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடை கட்டிடத்தின் முதல் மாடி தடுப்பு  சுவர் திடீரென அருகே நின்றிருந்த இருவர்கள் மீதும் விழுந்தது.

  இடிபாடுகளில் சிக்கிய இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நாள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கண்ணன் சரவணன் ஆகிய இருவரையும் மீட்டனர்.

  தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.  இவருக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தையும், 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதோடு பழனி முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வந்துள்ளார்.

  படுகாயம் அடைந்த கண்ணன் மீட்கப்பட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த விபத்து குறித்து கட்டிட உரிமையாளர் மற்றும் வாடைக்கு கடை வைத்திருந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும், இதுபோன்ற பழங்கால கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதால் மதுரை மாநகராட்சி 80 ஆண்டு கடந்த பழங்கால கட்டிடத்தை இடிக்க  உத்தரவிட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.  பழங்கால கட்டிடங்கள் இடிக்காமல் உள்ள நிலையில் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்,"மதுரை மாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில கட்டடங்கள் மட்டுமே குடியிருக்க தகுதியான தாக உள்ளது. பழமை வாய்ந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

  Also read... புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

  பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு இன்று முதல் ஆய்வு நடத்தி ஒரு வாரத்திற்குள் பழமை வாய்ந்த கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டட விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

  Also read... தமிழகத்தில் உள்ள அச்சகங்களை அரசு காத்திட வேண்டும் - வைகோ!

  விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த காவலர் கண்ணனுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார்...

  First published: