Home /News /tamil-nadu /

வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு!

புறநகர் பகுதியான மீனபாக்கம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம்,முடிச்சூர், மண்ணிவாக்கம்,
உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதியான மீனபாக்கம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம்,முடிச்சூர், மண்ணிவாக்கம், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறிப்பாக மதுரை சேலம் தர்மபுரி விருதுநகர் திருச்சி கரூர் நாமக்கல் கிருஷ்ணகிரி வேலூர் திருத்தணி ஆகிய இடங்களில் 39-40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 7 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் கன்னிமார் பகுதியில் 1செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி