Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதியும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 30ம் தேதி கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

    இதேபோல் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதியும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    Also read... அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

    நாளை வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rain updates, Weather News in Tamil

    அடுத்த செய்தி