9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: September 1, 2020, 2:20 PM IST
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள்  மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி புதுவை, காரைக்கால் உட்பட  பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் .

வரும் 02.09.2020, 03.09.2020  தேதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை,  திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் .


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த  விவரம்    பரமக்குடி (ராமநாதபுரம்) 13செ.மீ ,வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை தோட்ட அலுவலகம் வேடசந்தூர்  (திண்டுக்கல்) தலா 11 செ.மீ, காங்கேயம் (திருப்பூர்) 10 செ.மீ, ஆண்டிபட்டி(தேனி), ஆண்டிபட்டி(மதுரை) தலா 9(செ.மீ), நாவலூர்(திருச்சி ) 8(செ.மீ), மேட்டுப்பட்டி(மதுரை), பலவிடுதி(கரூர்), திருப்பூர் தெற்கு(திருப்பூர்), சேந்தமங்கலம்(நாமக்கல்) தலா 7(செ.மீ), ஒகேனக்கல்(தர்மபுரி), பென்னாகரம்(தர்மபுரி), கலசப்பாக்கம்(திருவண்ணாமலை), வடபத்துப்பட்டு(வேலூர்) தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.Also read... 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் அறிமுகம்மீனவர்களுக்கான எச்சரிக்கை: செப்டம்பர் 01 தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 02 குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 01, 02 கேரள கடலோர மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 05 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:  தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 02.09.2020-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை உயர் 2.5 முதல் 3.0 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading