தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

மாதிரி படம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

  • Share this:
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.Also read... 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா..

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: