Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மார்ச் 2-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மார்ச் 2-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Also read... பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.

    தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rain updates, Weather News in Tamil

    அடுத்த செய்தி