Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை - சென்னை வானிலை மையம்

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    வெப்ப சலனம் காரணமாக தமிழ் நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 28.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    29.07.2021 & 30.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

    31.07.2021 & 01.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    Also read... Chennai Power Cut | சென்னையில் இந்த பகுதிகளில் வியாழக்கிழமை (29-07-2021) மின்தடை...!

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
    பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம் (நீலகிரி) 7, ஆத்தூர் (சேலம்) 3, நடுவட்டம் (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தேவலா (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), சின்னக்கல்லார் (கோவை), வாழப்பாடி (சேலம்), அவலாஞ்சி (நீலகிரி), சோலையார் (கோவை), வால்பாறை PTO (கோவை ) தலா 2.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    வங்க கடல் பகுதிகளில் 28.07.2021 முதல் 29.07.2021வரை: வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அரபிக்கடல் பகுதிகளில் 28.07.2021 முதல் 01.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rain, Rain updates

    அடுத்த செய்தி