ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி - நிபந்தனைகள் என்னென்ன ?

சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி - நிபந்தனைகள் என்னென்ன ?

சேவல் சண்டை

சேவல் சண்டை

சேவல்களை துன்புறுத்த கூடாது, மது கொடுக்க கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது என நிபந்தனைகளுடன் ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெரியவடமலைபாளையம், திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால் அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் விபரம் பின்வருமாறு:-

சேவல் சண்டயின் போது சூதாட்டம் நடைபெற கூடாது.
சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது.
சேவல்களை துன்புறுத்தக் கூடாது.
சேவல்களின் கால்களில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்கள் கட்டக்கூடாது.
சேவல் சண்டை நடைபெறும் இடத்தில் காவலர் ஒருவரும், கால்நடை மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது
First published:

Tags: Pongal 2023