ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

எச் .ராஜா

எச் .ராஜா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

எச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அவர் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில் எச்.ராஜாவின் இச்செயலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

First published:

Tags: Case against H. Raja, Chennai High court, H.raja bjp, H.raja speech