• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விபத்தில் கையை இழந்த பல் மருத்துவருக்கு ரூ.82.60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் கையை இழந்த பல் மருத்துவருக்கு ரூ.82.60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் வலது கையை இழந்த பல் மருத்துவருக்கு 82.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 6 வாரங்களில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றுகிறார் டாக்டர் சரவண ரூபன். கடந்த 2009-ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து மரக்காணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து (SETC) மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்தில் வலது கையை இழந்த அவர், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, மோட்டார் வாகன விபத்துக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மனுதாரருக்கு 67.99 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க கடந்த 2013-ல் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு, அரசு விரைவு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகக் கூறி, ரூபனுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை 82.60 லட்சம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது. இத்தொகையை 6 வாரங்களில் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: