வடகிழக்கு பருவமழை: மழைசீர் சேகரிப்பு தொட்டிகளை சீர்செய்ய மாநகராட்சி வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழை: மழைசீர் சேகரிப்பு தொட்டிகளை சீர்செய்ய மாநகராட்சி வேண்டுகோள்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 30, 2018, 10:37 AM IST
  • Share this:
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பொதுமக்கள் தயாராக வைத்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மழை நீரை சேமிக்க கடந்த 2003-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் ஆரம்பித்தபோது கிடைத்த வரவேற்பு காலப் போக்கில் குறைந்தது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் 70 சதவிகித கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது இல்லை என்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.

வீடுகளில் சேகரிக்கும் மழை நீர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு தெருக்களில் ஓடும் நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மழை நீர் சேகரிப்பு குறித்து ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


வீட்டை அழகுப்படுத்த நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் நாம் நிலத்தடி நீரை சேமிப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றும், வீட்டில் உள்ள கிணற்றையே மழை நீர் சேகரிக்கும் விதத்தில் மாற்றி அமைக்கலாம் என்றும் நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தலை நகரமான சென்னையை சுற்றி பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டாலும், மழைநீர் சேகரிப்பின் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீர் எப்போதும் இருக்கும் என நீர் மேலாண்மை ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
First published: September 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading