கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது மத்திய குழு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறது மத்திய குழு!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, மத்திய மருத்துவக் குழு நாளை சென்னை வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, மருத்துவர்கள் ரவீந்திரா, சுகாஷ் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிபுணர் பிரவீன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் சென்னை வரவுள்ளனர்.



Also read... 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக துரித வாகன சேவை

அவர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். தமிழகத்தில் தொற்று பரவல், உயிரிழப்பு , கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading