மதுரையில் எய்ம்ஸ் அமைய விருப்பம் இல்லயா? - நீதிபதிகள் சரமாரியாக கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் அமைய விருப்பம் இல்லயா? - நீதிபதிகள் சரமாரியாக கேள்வி

கோப்புப் படம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய. அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதிலும், அதை மத்திய அரசிடம் ஒப்படைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    இதனால், நிலம் கையகப்படுத்த கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பிய நோட்டீசுக்கு தற்போது வரை அரசுத் தரப்பில் பதில் அளிக்காமல், கால அவகாசம் கோருவது நியாயமா என்றும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், எய்ம்ஸ்-க்கான நிலத்தை, மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி குறித்தும் தெளிபுபடுத்த மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.

    இயைடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய. அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    Also read... ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

    இதையடுத்து, நிலம் ஒப்படைப்பு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஏன் தவறான தகவல்கள் வழங்கப்படுகிறதா என்று, சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், கொரோனா ஊரடங்கால் எய்ம்ஸ் கட்டமைப்பு பணி தாமதம் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஜப்பான் ஜே.ஐ.சி.ஏ. நிதி நிருவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், வருகின்ற 2021 மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் நிதி கிடைத்துவிடும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: