ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ் பூஷண் கூறினார். 

  • 1 minute read
  • Last Updated :

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாநில தடுப்பூசி திட்ட இணை இயக்குநர் வினய் ஆகியோர் பங்கேற்றனர்.

Also read... கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை!

கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், இணை நோய் உள்ளவர்கள் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது என்றும், இணை நோயாளிகள் தங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினாார்.

Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ் பூஷண் கூறினார்.

First published: