Home /News /tamil-nadu /

போதை பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் மத்திய அரசு தான் - அமைச்சர் பொன்முடி

போதை பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் மத்திய அரசு தான் - அமைச்சர் பொன்முடி

 உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதற்கு காரணம் மத்திய அரசு தான் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை அண்ணா அறிவலாயத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குஜராத்தில் தான் அதிக அளவில் போதை பொருட்கள் புழக்கம் இருக்கிறது. குஜராத்தில் உள்ள துறைமுகத்தில் தான் அதிக அளவில் போதை பொருள் கடத்தல் நடக்கிறது. மத்திய அரசு போதை பொருள் தடுப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜயவாடா துறைமுகத்திலும் அதிக அளவு போதை பொருட்கள் கடத்தல் நடப்பதால் தமிழகத்தில் போதை பொருள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.



    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மற்ற மாநிலங்கள், நாடுகளில் இருந்து தான் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசும் போதை பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாக உள்ளது. துறைமுகங்களை தனியாருக்கு விடாமல், அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும்.

    Also Read : தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    2013-2022 வரை 32.99 கோடி மதிப்பிலான 952 டன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக அரசின் ஒரே ஆண்டில் 9.19 கோடி மதிப்பிலான 152 டன் போதை பொருட்கள் கைபற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் ரூ.25.50 லட்சம் சொத்துகள் கைபற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி