8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு

news18
Updated: September 14, 2018, 2:04 PM IST
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு
கோப்புப் படம்
news18
Updated: September 14, 2018, 2:04 PM IST
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு சமர்ப்பித்த இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதா நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு வழக்கறிஞர்கள், மத்திய அரசு இந்த திட்டத்தை இறுதி செய்யும் வரையில் நில ஆர்ஜித நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் உறிதியளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்காக சமீபத்தில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது குறித்தும் கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டிய 5 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளதாகவும் மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள் இருவரின் ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மரம் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் குற்றப் பின்னணி குறித்தும் கரூர் மாவட்ட துணை கண்ணானிப்பாளார் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை செப்.20-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...