ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றப்பட்டது - தமிழக அரசு

தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றப்பட்டது - தமிழக அரசு

ஜல்லிகட்டு

ஜல்லிகட்டு

விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது என்றும், அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதிடப்பட்டது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு என வாதிட்டார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளதுபோல், தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதாக எடுத்துக் கூறப்பட்டது.

இதையும் படிக்க :  மிரட்டும் புதிய புயல்.. தமிழகத்தின் 8 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு

விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது என்றும், அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததாக வாதிடப்பட்டது. குடியரசு தலைவருக்கு வழங்கிய ஆவணங்களை மனுதாரர்களுக்கு தர முடியாது என்றும், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்குகள் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Central government, Jallikattu, Supreme court