• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காட்டு யானைகளின் மரணங்கள் -  சிபிஐ விசாரணையில் வெளியானஅதிர்ச்சித் தகவல்கள்!

காட்டு யானைகளின் மரணங்கள் -  சிபிஐ விசாரணையில் வெளியானஅதிர்ச்சித் தகவல்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

முதற்கட்டமாக சத்தியமங்கலம், மேகமலை உட்பட 3 இடங்களில் யானைகள் மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் காட்டு யானைகள் இறப்பு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவின் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், யானைகள் வேட்டையாடப்படும் இந்த குற்றங்கள் சர்வதேச அளவில் நடைபெறுவதாகவும், இதன் பின்னணியில் மாபியா கும்பல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனைதொடர்ந்து சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐ முதல் வழக்காக பதிவு செய்தது. இது தவிர தமிழகத்தில் மேலும் இரு யானைகள் இயற்கைக்கு மாறாக இறந்தது என 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இதுதொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ், யானை தந்தம் கடத்தலில் பெரும் பணக்காரர்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

Also read...  கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த தற்காலிக கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் - தமிழக அரசு!

யானைகளின் அனைத்து மரணங்களையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை எனவும், அது நடைமுறை சாத்தியமற்றது எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சிபிஐ செயல்பாடுகள் வனத்துறையை பலவீனப்படுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது என ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.

வன விலங்குளின் உடலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம் எனவும், பெரும்பாலும் வேட்டை சம்பவகளில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இருக்கும் எனவும் இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் தெரிவித்தார். முதற்கட்டமாக சத்தியமங்கலம், மேகமலை உட்பட 3 இடங்களில் யானைகள் மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: