• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரவுடி என்கவுண்டர் - காவல்துறையினர் 7 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

ரவுடி என்கவுண்டர் - காவல்துறையினர் 7 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

அயனாவரம் ரவுடி சங்கர்

அயனாவரம் ரவுடி சங்கர்

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அயனாவரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சங்கர். இவர் மீது 4 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 51 வழக்குகள் சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் சங்கர் மீது பதிவாகியுள்ளன. இதில் 31 வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சங்கர் மீது 9 முறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இவர் கடந்த 21 ஆம் தேதி அயனாவரம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Also read... நடிகை கங்கனா ரனாவத்துக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு



இதனையடுத்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.  இதனையடுத்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாராஜ், வடிவேல், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகன் ஆகிய 7 பேரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு அதனை வீடியோ காட்சி பதிவாகவும் பதிவு செய்யப்படுகிறது மேலும் 25 கேள்விகள் கொண்ட படிவம் வழங்கப்பட்டு அதனை கைப்பட எழுதி விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: