ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

நான்கு மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read... Chennai Power Cut: சென்னையில் இன்று (24-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

First published:

Tags: Madras High court