அரசின் உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு டிஜிட்டல் கையெழுத்து - 4 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் துறை சார்ந்த உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளை 'டிஜிட்டல் கையெழுத்து' கொண்டு வெளியிடக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு டிஜிட்டல் கையெழுத்து - 4 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மாதிரிப் படம்.
  • News18
  • Last Updated: August 31, 2020, 5:50 PM IST
  • Share this:
கடந்த 2000 ஆண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மத்திய - மாநில அரசுகளில் பல்வேறு துறைகள் கணிணிமயமாக்கப்பட்டன. அதன்படி, மத்திய மாநில அரசுகளில் பல்வேறு துறைகள் வெளியிடும் உத்தரவுகளின் நம்பகத்தன்மையைக் உறுதிப்படுத்தும் வகையில் ' டிஜிட்டல் கையெழுத்து' முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் பல்வேறு அரசு துறைகளின் உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை 'டிஜிட்டல் கையெழுத்து' கொண்டு வெளியிட உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... கட்டணம் வசூல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது என தனியார் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரி வழக்கு


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது அரசு வேலை வாய்ப்புக்கு ஆன்-லைன் முலமாக விண்ணப்பங்கள் சமர்பிக்கும் போதும் விண்ணப்பதாரரின் கையெழுத்து இல்லாமல் அனுப்பப்படுவதால், இதில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் ஆன்-லைன் கையெழுத்து முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்த மனுதாரர் தரப்பு, அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் உத்தரவுகளில் முறைகேடுகள் செய்து திருத்தப்படுவதை தடுக்க முடியும் எனவும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய தமிழக அரசுகள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading