புது புது அறிவிப்புகளால் எடப்பாடி பழனிசாமி அவதார புருஷனாக விளங்குகிறார் என்று அமைச்சர்கள் பேரவையில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அவதாரங்களை எடுத்து அவதாரப்புருஷனாக விளங்குகிறார் என்று தெரிவித்தார்.
மேலும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட இதுக்கீடு தந்து, மருத்துவ மாணவராக அவதாரம் எடுத்தவர் முதல்வர். அதிகமான மருத்துவ கல்லூரிகளை திறந்து, ஒரு மருத்துவராக அவதாரம் எடுத்தவர் முதல்வர் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, ஒரு ஏழை விவசாயியாக அவதாரம் எடுத்தவர் முதல்வர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து, ஒரு தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவராக அவதாரம் எடுத்தவர் முதல்வர்.
குடி மராமத்து பணிகளை மேற்கொண்டு ஒரு சாதாரண குடிமகன் அவதாரம் எடுத்தவர் முதல்வர். அதேபோல கொரோனா காலகட்டத்தில் முன் கள பணியாளராக அவதாரம் எடுத்த அவதார புருஷன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Also read... Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?
மேலும் மருத்துவத்துறையில் மகப்பேறுத் திட்டத்தை செயல்படுத்தி மகப்பேறு தாயாக அவதாரம் எடுத்தார். உழைப்பால் திறமையால் அனுபவங்களால் எடுத்த காரியங்களில் நிலைகுலையாமல் செய்து முடிக்கும் அவதார புருஷன் தமிழக முதல்வர். முதல்வரை போன்று துணை முதல்வரும் அவதார புருஷனாக இருக்கிறார்.மீண்டும் 2021ல் முதல்வராக, துணை முதல்வராக இருவரும் அவதாரம் எடுப்பார்கள் என புகழாரம் சூட்டினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதனைத் தாெடர்ந்து பேசிய தமிழ்ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முதலமைச்சர் 8 அவதாரங்களை எடுத்ததாக கூறினார். ஆனால் அவர் 9 வதாக தமிழ் மொழியை காத்து தமிழ் மொழி காப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.