Home » News » Tamil-nadu » THE BULLS STARTED THE RACE AT THE WORLD FAMOUS MADURAI AVANIYAPURAM JALLIKKATTU VIN

Jallikattu Live: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது... சீறிப்பாயும் காளைகள்

காளைகளின் உரிமையாளர்கள் நள்ளிரவு 2 மணி முதலே காளைகளுடன் காத்திருக்கின்றனர். காலை 4 மணி முதல்தான் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.

Jallikattu Live: மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது... சீறிப்பாயும் காளைகள்
ஜல்லிக்கட்டு
  • News18
  • Last Updated: January 14, 2021, 8:32 AM IST
  • Share this:
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாயத் தொடங்கின.

தைப்பொங்கலையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதல் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.

போட்டியில், 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.




இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் முகக்கவசங்கள் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Also read... பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து..இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கிய நிலையில், காளைகளின் உரிமையாளர்கள் நள்ளிரவு 2 மணி முதலே காளைகளுடன் காத்திருக்கின்றனர். காலை 4 மணி முதல்தான் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது. போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார்.

இதையொட்டி சுமார், 1,500 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: January 14, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading