Home /News /tamil-nadu /

பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பயங்கரம்: கழுத்து அறுக்கப்பட்டு கல்லூரி மாணவி படுகொலை!

பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பயங்கரம்: கழுத்து அறுக்கப்பட்டு கல்லூரி மாணவி படுகொலை!

மாதிரி படம்

மாதிரி படம்

சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    பொள்ளாச்சி அருகே சாலையோரம் கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

    கடந்த 5-ம் தேதி கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று ஊருக்குக் கிளம்பிய அவர், வீடு வந்து சேரவில்லை. இதனால் மாணவி காணாமல் போனதாக பெற்றோர் காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவியை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் சாலையோரம் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார், அது காணாமல் போன மாணவி என்பதை உறுதி செய்தனர். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இதனை விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையில், இந்தச் சம்பவம் நடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவி அணிந்திருந்த தங்க நகைகள் திருடு போகாமல் அப்படியே இருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா எனவும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உயிரிழந்த மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறியது முதல் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    மாணவியின் செல்போன் சிக்னல் பதிவாகிய கோவை ஆவாரம்பாளையம், காந்திபுரம் மற்றும் பொள்ளாச்சி, கோமங்கலம், அம்பராம்பாளையம், ஆனைமலை ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

    சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம், கோவையில் 6 வயது சிறுமி பாலியல் படுகொலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் மரணம் கோவை வட்டார மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Pollachi, Pollachi sexual harassment

    அடுத்த செய்தி