Home /News /tamil-nadu /

TN Breakfast: தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம்

TN Breakfast: தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம்

மாணவர்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிடும் முதல்வர்

மாணவர்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிடும் முதல்வர்

முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான #TNBreakfast என்னும் ஹேஷ்டேக் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

 

டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும் காலை சிற்றுண்டி திட்டம்


மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து  சிற்றுண்டியை உண்டார்.

முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான #TNBreakfast என்னும் ஹேஷ்டேக் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Published by:Arunkumar A
First published:

Tags: Anna, Breakfast, CM MK Stalin, Madurai, Tamilnadu, Trending, Twitter

அடுத்த செய்தி