• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமண செய்துவைகாத ஆத்திரத்தில், காதலி, காதலியின் தாயை தீவைத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

திருமண செய்துவைகாத ஆத்திரத்தில், காதலி, காதலியின் தாயை தீவைத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தற்கொலைக்கான காரணம் குறித்து 33 பக்கத்தில் நோட்டில் எழுதி வைத்து விட்டு, இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  • Share this:
    சென்னை கொருக்குப்பேட்டையில் திருமணம் செய்து வைக்காத விரக்தியில், இளைஞர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி காதலி, காதலியின் தாயுடன் தன்னையும் கொளுத்திக் கொண்டார். இதில், மூவரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2 வது தெருவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது கொருக்குப்பேட்டை தீயணைப்பு துறையினர் ஆர்கே நகர் போலீசார் தீயை அனைத்து உள்ளே சென்று பார்த்த போது உள்ளே மூன்று பேரின் உடல் தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட ஆர்கே நகர் போலீசார் விசாரணையில் வீட்டின் உரிமையாளர் வெங்கடம்மாள், இவரது கணவர் வெங்கடேஷ் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார் . கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்த நிலையில் மகள் ரஜிதாவுடன் வசித்து வந்துள்ளார். மேலும் கணவரின் வேலை மகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், மகள் ரஜிதா கடந்த ஏழு வருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலித்த நபர் ராயபுரம் மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். ரஞ்சிதாவின் பணி நிரந்தரம் ஆகவே ரஞ்சிதாவின் தாயார் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த மாதம் நிச்சயதார்த்தமும் நடத்தியுள்ளார்.

    அன்றிலிருந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்த காதலன் பூபாலன் இன்று அதிகாலை 4 மணி அளவில் கையில் மண்ணெண்ணெய்யுடன் ரஜிதா வீட்டிற்கு சென்று, அதை உடலில் ஊற்றி கொளுத்திக் கொண்டு ரஜிதா மற்றும் வீட்டில் இருந்த நபர்கள் மீதும் தீ வைத்து கொளுத்தி விட்டதாக தெரிகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து 33 பக்கத்தில் நோட்டில் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. நோட்டை கைப்பற்றி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க...டெலிவரி செய்த பொருட்களுக்கு பணம் தராமல் தாக்கிய நபரை தேடும் போலீஸ்...

    கொருக்குப்பேட்டை பகுதியில் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: