Home /News /tamil-nadu /

வேறு பெண்ணுடன் பேசியதைக் தட்டிக் கேட்ட காதலி கொலை.. சட்டீஸ்கரை சேர்ந்த மைனர் காதலன் நாமக்கல்லில் கைது

வேறு பெண்ணுடன் பேசியதைக் தட்டிக் கேட்ட காதலி கொலை.. சட்டீஸ்கரை சேர்ந்த மைனர் காதலன் நாமக்கல்லில் கைது

காலியை கொலை செய்த காதலன்

காலியை கொலை செய்த காதலன்

Namakkal : நாமக்கல்லில் காதலியை துப்பட்டாவால் கழுத்திறுக்கி கொலை செய்த, சட்டீஸ்கரை சேர்ந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாமக்கல் வேறு பெண்ணுடன் பேசியதைக் தட்டிக் கேட்ட காதலியை கொலை செய்த காதலனை மோகனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பண்ணையில் பணிபுரிய அங்குள்ள சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் அதே மாநிலத்தைச் சேர்ந்த சோமனுபோயன் (17), அவரது காதலி போதிமாண்டவி (16) ஆகிய இருவரும் வேலை கேட்டு வந்துள்ளனர்.

    எனினும், குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில்லை எனக்கூறி இருவரையும் பண்ணை உரிமையாளர் திருப்பி அனுப்பியுள்ளார். இச்சூழலில் இருவரும் பணியில் உள்ள நண்பருடன் தங்கியிருந்துள்ளனர். நேற்று காலை சோமனுபோயன் தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட போதிமாண்டவி, சோனுபோயனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    Must Read : போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்தல்.. சப் இன்ஸ்பெக்டர், 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

    இதில் ஆத்திரமடைந்த சோமனுபோயன், தனது காதலி போதிமாண்டவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் சோமனுபோயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - ரவிக்குமார், நாமக்கல்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Crime News, Love, Murder, Namakkal, Police

    அடுத்த செய்தி