வால்பாறையில் சிறுவனை கழுத்தில் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை

Youtube Video

வால்பாறையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  பொள்ளாச்சி, வால்பாறை அருகே உள்ள சோலையார் 3வது டிவிஷன் பகுதியில் ஈஸ்வரன் என்ற 12 வயது சிறுவன தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த சிறுத்தை ஈஸ்வரனை கழுத்துப் பகுதியில் கடித்து இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் சிறுத்தை ஈஸ்வரனை விட்டுச் சென்றது.

  இதையடுத்து பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுவனுக்கு கோவைஅரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க... கொரோனா அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ள மாநிலங்கள்...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: