‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ விற்றுத் தீர்ந்தது 1 லட்சம் புத்தகங்கள்!

பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்துடன் மாணவர்கள்.

“ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு அந்த தருணத்தில் மட்டும் கோபப்படுகிறோம். இது கண நேர வெற்றுக் கூச்சலாக மட்டும் இருந்துவிடக் கூடாது. பெண் விடுதலை பற்றிய புரிதல் பெண்களுக்கும் பெண்களைப் பற்றிய புரிதல் ஆண்களுக்கும் ஏற்பட வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தந்தைப் பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூல், சுமார் 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகள் தமிழகம் முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளது.

90 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தைப் பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலை இன்று தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் நன்செய் பதிப்பகம் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் அவரது நினைவு நாளான டிசம்பர் 23-ம் தேதி வரையிலான சுமார் 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளை தமிழகம் முழுவதும் விற்க வேண்டும் என்ற இலக்கை தொட்டு விட்டது.



பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் 90 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நூல் சமூகத்துக்கு அவசியமானது என்ற கருதியதால் நன்செய் பதிப்பகத்தைச் சேர்ந்த கவிஞர் தம்பி கூறுகிறார். “ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு அந்த தருணத்தில் மட்டும் கோபப்படுகிறோம். இது கன நேர வெற்றுக் கூச்சலாக மட்டும் இருந்துவிடக் கூடாது. பெண் விடுதலை பற்றிய புரிதல் பெண்களுக்கும் பெண்களைப் பற்றிய புரிதல் ஆண்களுக்கும் ஏற்பட வேண்டும். அதற்கு இந்நூல் மிக அவசியம்.

எனவே ஒரு லட்சம் பிரதிகளில் நாங்கள் அதிகம் கொண்டு சேர்த்திருப்பது பள்ளி மாணவர்களிடம் தான். முதலில் எந்த வயதிலிருந்து இந்நூலை படிக்க கொடுக்க முடியும் என்ற தயக்கம் இருந்தது. ஜவ்வாது மலைப் பகுதியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் இந்நூலை வாசித்து அது குறித்து பேசிய விதம் எங்களுக்கு உற்சாகத்தை தந்தது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் இந்நூலை பெற்றுக் கொண்டு தங்களது மாணவர்களுக்கு கொடுக்கின்றனர். மாணவர்களிடம் நூல் சென்று சேர்வது மட்டுமல்லாமல் பல இடங்களில் நூலை வாசித்து அது குறித்த விவாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன” .



பள்ளிகளில் மட்டுமல்லாமல் திருமண நிகழ்வுகள், பணி ஓய்வு நிகழ்வுகள் என பல்வேறு தருணங்களில் இந்நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

தந்தைப் பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மூல பிரதியை எந்த வித மாற்றமுமில்லாமல் அதே வடிவில் கொடுத்துள்ளனர் நன்செய் பதிப்பகம். இந்நூலின் அட்டைப்படத்தை சந்தோஷ் நாராயண் புதிதாக வடிவமைத்துள்ளார். இந்நூலை ரூ.10க்கு மட்டுமே விற்று வருவதால் மக்களிடம் எளிமையாக சென்று சேர்கிறது.

‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய நாங்கள் எங்கள் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் நன்செய் பதிப்பகத்தின் பூபதி , “ஜனவரி மாதம் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் ஒரு அரங்கு முழுவதும் இந்நூலை மட்டும் வைத்து விற்க முடிவு செய்துள்ளோம். 17 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அதே போன்று மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பிரதிகளை விற்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்”.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: