Home /News /tamil-nadu /

இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - ஊர் மக்கள் கூடி அஞ்சலி

இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - ஊர் மக்கள் கூடி அஞ்சலி

ராணுவ வீரர் லக்‌ஷ்மணன்

ராணுவ வீரர் லக்‌ஷ்மணன்

21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி தாலுகா தும்மக் ஊராட்சிக்குட்பட்ட டி.புதுப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் வாங்கிய விவசாய நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ரைபில் மேன் லட்சுமணன் வீர மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலை டெல்லிக்கு கொண்டு சென்று அங்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

    அங்கிருந்து இன்று காலை ஹைதராபாத் வழியாக மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி தாலுகா தும்மக் ஊராட்சிக்குட்பட்ட டி.புதுப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் வாங்கிய விவசாய நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்தனர். முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் பெற்றோருக்கு தமிழக ஆளுநர் சார்பாக இரங்கல் கடிதம் ஆளுநர் சார்பாக அரசு துறை அதிகாரிகள் ராணுவ வீரர் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கினர். மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கினர்.

    இராணுவ வீரர் லட்சுமணன் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Indian army, Madurai

    அடுத்த செய்தி