ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாட்டின் பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இல்லை- வைகோ

நாட்டின் பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இல்லை- வைகோ

வைகோ

வைகோ

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டாலும் மதிமுகவே போட்டியிடுவது போன்ற எண்ணத்தோடு களப்பணி ஆற்றுவோம் என்று வைகோ தெரிவித்துள்ளார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நாட்டின் பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது ரஃபேல் விவகாரத்திலேயே தெரிந்துவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியுடன் வைகோ சந்தித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘ ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டதிற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டாலும் மதிமுகவே போட்டியிடுவது போன்ற எண்ணத்தோடு களப்பணி ஆற்றுவோம்.

மீண்டும் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பது தான் வாக்காளர்களின் எண்ணமாக உள்ளது. காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகளின் பங்களிப்புடன் மத்தியில் அமையும் ஆட்சி கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும். ஈரோடு மட்டுமல்ல 40 தொகுதிகளிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.

புல்வாமா தாக்குதலை பாஜக அரசியலாக்கிட்டது. ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது ரஃபேல் விவகாரத்திலேயே தெரிந்து விட்டது என்று பேசியுள்ளார்

Also watch

Published by:Prabhu Venkat
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Vaiko