ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது.. கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது.. கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது.. கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது.. கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

லாக்கப் மரணங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் லாக்கப் மரணங்கள் இல்லாமல் காவல்துறையினரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள் என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது. மக்களின் வரிப்பணத்தில் இதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாமாங்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,  அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மேலும் கொடுமையான செயலை இந்தியாவின் மீது திணிக்கிறது. நான்கு ஆண்டுகளில் இளைஞர்கள் ராணுவத்தில் இருந்து என்ன செய்ய முடியும். மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது. மக்களின் வரிப்பணத்தில் இதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதுதான் கேள்வி என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ராணுவ வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளது. பல ஆண்டுகளாக அது நடைமுறையில் உள்ளது. பாஜகவின் தற்போது நடைபெறும் ஆட்சிக்கு பிறகு, தேர்தல் வாக்குச்சாவடியில் ஆயுதங்களை ஏந்திய இளைஞர்களை நிறுத்த திட்டம் வைத்துள்ளனர். இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் வருகை 27ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது சர்வாதிகாரத்துக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் எனவும் கூறினார்.

இதற்கு நாட்டு மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. பல்வேறு நாடுகளில் ஹிட்லர், முசோலினி உள்ளிட்ட சர்வாதிகாரிகள் போன்று, அதுவே தான் இந்தியாவில் நடைபெறுகிறது. மக்களிடையே வேறுபாடு ஏற்படுத்துவதற்காக நடைபெறுகிறது என்ற அவர், காங்கிரஸ் கட்சி பொதுத்துறைக்கும், தனியார் துறைக்கும் ஆகிய இரண்டிற்குமே அனுமதி கொடுத்தது. பாஜக பொதுத்துறை அழித்து தனியார் துறையை வளர்க்கிறார்கள். இந்தியாவின பொருளாதாரக் கொள்கைக்கும், ஜனநாயகத்திற்கும் தவறான செயல். இதனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் வரும் நிலைதான் உருவாகும் எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உட்கட்சி கூட்டங்களில் சிறந்த ஜனநாயகம் இருக்க வேண்டும், அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் நுழைய விரும்பவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் அவர் சிறந்த நண்பராக இருந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாகரீகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேறு விதமாக தீர்த்துக் கொள்ளக் கூடாது.  அதிமுகவில் நடைபெற்றது வருத்தத்திற்கு உரியது என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு தொடர் விசாரணை குறித்த கேள்விக்கு, சர்வதிகாரிதனமாக செயல்படுகிறார் மோடி, கருத்து வேறுபாடு உள்ளவர்களை அழிக்கப் பார்க்கிறார். அதற்கான செயல்பாடே நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஓராண்டிற்கு இவ்வளவு தான் செய்ய முடியும். ஒரு ஆண்டிற்குள் அனைத்து செய்ய முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதில் பெரும்பாலானவை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ளவை நிறைவேற்ற முயற்சி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கூறினால் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

லாக்கப் மரணங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் லாக்கப் மரணங்கள் இல்லாமல் காவல்துறையினரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள். திரௌபதி என்ற பெயர் மீது உள்ள மோகத்தில் தான், குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளனர்.  நளினியை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு இல்லை. பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே விடுதலை செய்துவிட்டனர். சிறிய குற்றம் செய்த நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை எனவும் கூறினார்.

First published:

Tags: Agnipath, Congress, K.S.Alagiri