• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதா தாக்கல்

உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதா தாக்கல்

தமிழக அரசு

தமிழக அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

  • Share this:
    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

    புதிய சட்டத்தால் பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு அமலில் உள்ளது. கடந்த 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

    Must Read : ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை - அதிரடி உத்தரவு

    அதற்கான மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: