Home /News /tamil-nadu /

மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன் - உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன் - உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.

    காணொளி காட்சி விசாரணையின் போது வழக்கறிஞர் பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அசிங்கமான செயலால் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என  கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது.

    சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Also read:  போலீஸ்காரரின் எலும்புகளை உடைத்த Swiggy டெலிவரி பாய் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

    இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான
    வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.
    இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு  பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
    .
    சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

    Also read:    ஒரு இளைஞருக்காக +2 மாணவிகள் இருவர் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை - தனுஷ் பட பாணியில் சம்பவம்..

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி,
    சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அடையாளம் காணப்பட்டு,வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

     Also read:    அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத்!

    மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ் இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம் என்றும் தனது பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசித்ததாக வேதனை தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Chennai High court, Madras High court

    அடுத்த செய்தி