இந்த மாதம் தமிழகத்தில் ஒருநாள் ஆட்டோ ஓடாது...! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி 8 ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் முடிவு.

இந்த மாதம் தமிழகத்தில் ஒருநாள் ஆட்டோ ஓடாது...! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஆட்டோ ஓட்டுநர் சங்கம்
  • News18
  • Last Updated: January 2, 2020, 4:24 PM IST
  • Share this:
பல்வேறு விவகாரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 8-ம் தேதி ஆட்டோ ஓடாது என்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து ஆட்டோ  தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்றது. அதில், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும்,  ஓலா, உபர், ரேபிடோ போன்ற டூ வீலர் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.

ஓட்டுநர் தொழிலை பாதிக்கும் சாலைப் போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும், போக்குவரத்து சட்டம் எனும் பெயரில் அதிக அளவில் அபராத தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் கோலமிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அனைவருக்குமான பிரச்சனை என்றும், ஆட்டோ ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் அன்று பகல் 12 மணி முதல் 12. 10 மணி வரை சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading