மைனர் வயது பெண்ணுடன் காதல்: ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை

தர்மராஜின் கொலையில் சம்மந்தபட்டவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காதலியான மைனர் பெண்ணை சந்திக்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் பெரும்பாரை பகுதியை சேர்ந்தவர் 27 வயதான தர்மராஜ்.  இவரும், ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு எடுத்தவர்களுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதால், திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தனது காதலி அழைத்ததாக கூறி, தர்மராஜ் தனது நண்பர் ஏழுமலையுடன் அவரது வீட்டின் அருகே சென்றுள்ளார். இதை கண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர்களை தாக்க முயன்றுள்ளனர். இருவரும் தப்பியோடிய நிலையில் தர்மராஜ் மட்டும் நீண்ட நேரமாக காணவில்லை.

  ஞாயிற்றுக்கிழமை காலையில், தர்மராஜ், ஈக்காட்டூர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் உறவினர்கள், அவரது மரணத்திற்கு பெண்ணின் வீட்டாரே காரணம் என்றும், தர்மராஜை அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதனிடையே தர்மராஜின் உடலை காலி மைதானத்தில் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அதனை அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தர்மராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக உள்ள மைனர் வயது பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தேடி வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: